இந்துமத உணர்வுகளை தவிர்ப்பதற்காக இலங்கை இவ்வாறு சிந்தித்துவருகின்றது.இலங்கை ஜனாதிபதியின் சமீபத்தைய இந்திய விஜயத்தின்போது இலங்கை துறைமுகங்களுடன்தொடர்பை அதிகரிப்பதற்காக தரைரீதியிலான தொடர்புகள் குறித்து ஆராயப்பட்டது.
நீண்டகாலத்திற்கு முன்னர் இதேயோசனை முன்வைக்கப்பட்ட வேளை ராமர்சேது பாலம் அல்லதுஆதாமின் பாலத்தைஉருவாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
இராவணணின் பிடியிலிருந்த சீதையை காப்பாற்றுவதற்காக ராமர் இலங்கை நோக்கிபயணித்தவேளை உருவாக்கப்பட்டது இந்த பாலம் என்பது புராணம்.
இந்தியாவில் சேது சமுத்திரதிட்டத்திற்கு சிலதரப்பினர் சூழல் ஆர்வலர்கள் சில இந்துக் குழுக்கள் போன்றவை கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன- இந்திய நீதிமன்றம் அதற்கு எதிராகதீர்ப்பு வழங்கியுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான தரைதொடர்பை ஏற்படுத்துவதற்காக புதிய பாதையொன்றை உருவாக்குவது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ள விடயமறிந்தவட்டாரங்கள் இராமர் சேது பாலத்தைவிட இது நீளமாக காணப்படும் என தெரிவித்துள்ளன
0 Comments
No Comments Here ..