பிரிட்டனில் எரிஸ் என்ற புதியவகை கொவிட்வைரஸ் பரவுவதை தொடர்ந்து அது குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய வைரஸ்குறித்தும் அதுபரவும் விதம் குறித்தும் உன்னிப்பாக அவதானித்துவருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரோன் வகையை சேர்ந்த எரிஸ் என்ற புதியவகை வைரஸ் பிரிட்டனில் பரவுவது முதன்முதலாக 31ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இதுவரை பாதிக்கப்பட்ட பத்துபேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கையின் கொவிட் 19 குறித்த ஒருங்கிணைப்பாளர் வெளிநாட்டில் பரவும் எந்தவொரு வைரஸ் குறித்தும் இலங்கை எச்சரிக்கை நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இது குறித்து அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் வைரஸ் பரவுவதை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனில் பரவும் வைரசினை பொறுத்தவரை நாங்கள் எச்சரிக்கையுடன் உள்ளோம் நிலைமைய உன்னிப்பாக அவதானிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..