கோவை பீளமேடு பகுதியில் மக்கள் சேவை மையம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இடையேயான கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பா.ஜ.க. தேசிய மகளிர் ஆணைய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது:- கலைஞர் என்னுடைய ஆசான் என்பதில் பெருமை கொள்கிறேன். அவரைப் பற்றி பேசுவது என்றால் நாள் முழுக்க பேசலாம், நான் அங்கிருந்து வந்தவள், அவரைப் பற்றி நன்றாக தெரியும்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பிரதமர் மோடிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆடை சுதந்திரம் இருக்கலாம், மனிதராக பிறந்துள்ளதால் ஒரு எல்லையுடன் இருக்க வேண்டும். எனக்கான எல்லை என்பது புடவை அணிவதுதான் என்றார்
0 Comments
No Comments Here ..