கொறோனா வைரஸ் தாக்கத்தை அவசர நிலைமையாக கருத்திற்கொண்டு, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அதன் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இது தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் நாடாளுமன்றம் வழமையாக கூடவுள்ளது.
இந்த நிலையில், கொறோனா வைரஸ் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..