கொரியாவிற்கு தொழிலுக்காக சென்று குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி அந்நாட்டில் தங்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு தண்டனையின்றி தமது நாடுகளுக்கு செல்வதற்கான பொது மன்னிப்பு காலம் ஒன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பொதுமன்னிப்பு காலம் 2019 டிசம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீசா காலம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக கொரியாவில் தங்கியிருக்கும் நபர்கள் இந்த பொதுமன்னிப்பு காலப்பகுதியில் பயணச் சீட்டு, தன்னார்வ அறிக்கை மற்றும் தங்குமிட பாஸ் ஆகியவற்றை பிரதேசத்தில் அமைந்துள்ள குடிவரவு அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னர் எவ்வித அபராதமும் இன்றி அந்நாட்டில் இருந்து வௌியேற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குறித்த நபர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படாத நிலையில், தேவை ஏற்பட்டால் E-9, D-2, D-4, D-8 வகையான வீசாக்களுக்கு விண்ணப்பிக்கும் சந்தர்ப்பம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..