13,May 2025 (Tue)
  
CH
இலங்கை செய்தி

கடந்த ஒரு வாரத்தில் 201 பேருக்கு டெங்கு - ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 24 ஆம் திகதி வரையும் 201 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் தெரிவித்தார்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 38 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஆரையம்பதி 35 பேர், களுவாஞ்சிக்குடி 21 பேர், வாழைச்சேனை 16 பேர், செங்கலடி 22 பேர், காத்தான்குடி 14 பேர், ஏறாவூர் 5 பேர், வெல்லாவெளி 4 பேர், வவுணதீவு 6 பேர், பட்டிப்பளை 6 பேர், ஓட்டமாவடி 10 பேர், கோரளைப்பற்று மத்தி 18 பேர், கிரான் 6 பேர் என டெங்கு தொற்று நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாகவும் மொத்தமாக கடந்த வாரம் 201 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு வைத்திய கலாநிதி வே. குணராஜசேகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.




கடந்த ஒரு வாரத்தில் 201 பேருக்கு டெங்கு - ஒருவர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு