15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

தெப்பகுளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்தாய்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


அவரது சடலம் இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவர் தனது ஒரு வயது குழந்தையுடன் குளத்தில் குதித்தாரா, இல்லையா, அந்த குழந்தை எங்கே, குழந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


லோகி தோட்டத்தைச் சேர்ந்த மகாமணி தயானி (26) என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தான் எழுதிய ஐந்து பக்க கடிதம், தனது திருமண பதிவு அட்டை, தேசிய அடையாள அட்டை என்பவற்றை தெப்பக்குளத்துக்கு அருகில் வைத்துவிட்டே குளத்தில் குதித்துள்ளார். 

அந்த கடிதத்தில், தன்னையும் தனது குழந்தையையும் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்தியதாக அவர் எழுதியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.





தெப்பகுளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம்தாய்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு