முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பு கட்டடம் மற்றும் நன்னீர் மீன் புகைக்கருவாடு உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று (22) காலை 9 மணியளவில் நடைபெற்றது.
உலக உணவுத்திட்டத்தின் நிதி அனுசரணையில் இந்த புகைக்கருவாடு உற்பத்தி நிலையம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனால் திறந்துவைக்கப்பட்டது.
நன்னீர் மீன்பிடி அதிகம் நடைபெறும் குளங்களில் ஒன்றான அம்பலப்பெருமாள் குளத்தின் நன்னீர் மீனவர்களின் நன்மை கருதி இந்த நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குளத்தில் பிடிக்கப்படுகின்ற மீன்களை சந்தைப்படுத்த முடியாத சூழ்நிலையும் அதேநேரம் மிகக் குறைந்த விலையில் மீனை கொள்வனவு செய்யும் நிலைமையும் காணப்படுவதால் இந்த புகைக்கருவாடு உற்பத்தி நிலையமானது நன்னீர் மீனவர்களுக்கு சிறந்த பயனை வழங்கும்.
இந்த கட்டடத் திறப்புவிழா நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் (காணி) மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் ஜெயபவாணி, துணுக்காய் பிரதேச செயலாளர் லதுமீரா, உலக உணவுத்திட்டத்தின் செயற்றிட்ட பணிப்பாளர், மாந்தை கிழக்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளர், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர், ஏனைய உத்தியோகத்தர்கள், நன்னீர் மீனவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
0 Comments
No Comments Here ..