04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார்

ரஸ்ய விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது அதிலிருந்த பத்துபேரும் உயிரிழந்துள்ளனர் அதில் பயணம் செய்தவர்களில்; வோக்னர் கூலிப்படையின் தலைவரின் பெயரும் உள்ளது என ரஸ்யாவின் உள்நாட்டு விமானப்போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை வாக்னர் தலைவரின் தனிப்பட்ட விமானத்தை ரஸ்யா சுட்டுவீழ்த்தியது என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின்றன.


ரஸ்யாவிற்கு துரோகமிழைப்பவர்களின் நடவடிக்கை காரணமாக பிரிகோஜின் உயிரிழந்தார் என டெலிகிராமில் பதிவொன்று வெளியாகியுள்ளது.

மொஸ்கோவிற்கு வடமேற்கில் உள்ள வெர் பிராந்தியத்திலேயே விமானவிபத்து இடம்பெற்றுள்ளது.ரஸ்யாவின் விமானப்படை தளபதி பதவியிலிருந்து சேர்கேய் செரோவிகின் நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியான அதேநாளில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இருவருக்கும் இடையி;ல் சிறந்த உறவு காணப்பட்டதும் - வாக்னர் குழுவின் கலகத்தின் பின்னர் விமானப்படை தளபதி பொதுவெளியில் காணப்படாததும் குறிப்பிடத்தக்கது.

பிரிகோஜினின் எம்பிரேரர் விமானம் ஏழு பயணிகள் மூன்று விமானபணியாளர்களுடன் மொஸ்கோவிலிருந்து சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கு சென்றுகொண்டிருந்தது என ரஸ்யாவின் விமானபோக்குவரத்து அதிகாரி சபை தெரிவித்துள்ளது.


குறிப்பிட்ட விமானத்தில் 2014 இல் வாக்னர் குழுவை ஆரம்பித்த சிரேஸ்ட தளபதி டிமிட்ரி உட்கினும் பயணித்துள்ளார்.

விமானம் மொஸ்கோவிற்கும் சென்பீட்டர்ஸ்பேர்க்கிற்கும் இடையில் உள்ள குசேன்கினோ கிராமத்தில் விழுந்து நொருங்கியுள்ளது.


வாக்னர் தலைவரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என இன்டர்பக்ஸ் தெரிவித்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் பொதுமக்கள் இரண்டு சத்தங்களை கேட்டனர் என கிரேஜோன் டெலிகிராம் தெரிவித்துள்ளது.





ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் உயிரிழந்துள்ளார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு