03,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவரின் முக்கியப் பணி

நிலவின் தரைப்பரப்பில் இறங்கிய ரோவர், உடனடியாக தனது பணிகளைத் தொடங்காது. நிலவில் உள்ள சூழலைப் பொறுத்து ரோவரில் உள்ள கருவிகள் வெளியே வர ஒருநாள் கூட ஆகலாம்.

6 சக்கரங்கள் கொண்ட இந்த பிரக்யான் ரோவர், ஒவ்வொரு நாளும் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நிலவின் பரப்பில் ஊர்ந்து செல்லும்.

பிரக்யான் ரோவரின் முக்கியப் பணி, நிலவின் மேற்பரப்பைப் பற்றியும், அதிலுள்ள கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்வதுமே ஆகும். அதன்படி, முதல் ஆய்வாக, ரோவரில் இருந்து நிலவின் பரப்பில் லேசர் ஒளிக்கற்றை செலுத்தப்பட்டு மணல் மற்றும் பாறைகளில் உள்ள ரசாயன கலவையை ஆய்வு செய்யும்.



நிலவின் பாறைகளை மூடியுள்ள ரொகோலித் என்ற மணற்பரப்பை உருக்கி அதிலிருந்து வெளியேறும் வாயுக்களையும் ரோவர் ஆய்வு செய்யவுள்ளது. இதே போன்று, நிலவின் மேற்பரப்பில் உள்ள கனிம பொருட்களின் கலவை குறித்த பகுப்பாய்வையும் ரோவர் மேற்கொள்ளும்.  அதாவது, alpha பார்ட்டிகிள் எக்ஸ்-ரே ஸ்பெக்டோமீட்டர் என்ற கருவி மூலம் மக்னீசியம், சிலிக்கான், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, டைட்டானியம் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளதா என்பதை கண்டறிய ஆய்வு நடைபெறும்.

மேலும், நிலவின் வளிமண்டலம், இரவு - பகல் மாறுபாடுகள் குறித்த ஆய்வையும் ரோவர் மேற்கொள்ளவுள்ளது. இதே போன்று, I.L.S.A. என்ற கருவி மூலம் நிலவில் பூமியைப் போன்று நில அதிர்வுகள் ஏற்படுமா என்ற முக்கிய ஆய்வையும் ரோவர் நடத்தவுள்ளது.


ரோவரில் பொறுத்தப்பட்டுள்ள 3டி கேமரா மூலம், நிலவில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நகர்வும் புகைப்படம் எடுக்கப்படும்.

ரோவரில் இருந்து பெறும் தகவல்களை விக்ரம் லேண்டர், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கும். சூரிய சக்தியைக் கொண்டு இயங்கும் பிரக்யான் ரோவர், நிலவில் சூரிய ஒளி கிடைக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு தனது பணியை நிறைவு செய்யும்





நிலவில் தரையிறங்கிய பிரக்யான் ரோவரின் முக்கியப் பணி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு