07,Feb 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கை குண்டுகள் மீட்பு

கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வீதிக்கு அருகாமையில் நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கை குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


எஸ்.எப்.ஜி. 87 ரக கைக் குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக் குண்டுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டுகள் யுத்த காலத்தில் எல்.ரி.ரி.ஈ அமைப்பினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


கண்டெடுக்கப்பட்ட கைக் குண்டுகள் அனைத்தும் கிளிநொச்சி விசேட குண்டு செயலிழக்கும் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன




நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த 18 கை குண்டுகள் மீட்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு