21,Nov 2024 (Thu)
  
CH
இலங்கை செய்தி

இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் தெரிவு

2024ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகம் தரவரிசைகளில் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசையில் 1,001 முதல் 1,200ஆம் இடங்களுக்குள் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு பல்கலைக்கழகம் கற்பித்தலில் 25.4 புள்ளிகளுடன் உள்நாட்டு தரவரிசையில் முதலிடத்திலும், பேராதனை பல்கலைக்கழகம் சர்வதேச கண்ணோட்டத்தில் 39.8 புள்ளிகளுடன் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 


2024ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையில் 20வது ஆண்டில் 1904 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. 

இதில் களனி பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியன இந்த தரவரிசையில் இணைக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய தரவரிசைகள் 18 செயல்திறன் பணிகளில் சிறந்த பல்கலைக்கழகங்களை மதிப்பிடுகின்றன. அவற்றில் கற்பித்தல், ஆராய்ச்சி, அறிவுப் பரிமாற்றம் மற்றும் சர்வதேசமயமாக்கல் ஆகியன முக்கிய பணிகளாகும்.



ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் எட்டாவது ஆண்டாக உயர்கல்வி உலக பல்கலைக்கழகம் தரவரிசைகளில் முதலிடத்தை பிடித்துள்ளது.


ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் உயர்கல்வி உலக பல்கலைக்கழகம் தரவரிசைகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

உலகின் சிறந்த 10 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம், ஹார்வர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், இம்பீரியல் கல்லூரி லண்டன், கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி மற்றும் யேல் பல்கலைக்கழகம் என தெரிவு செய்யப்பட்டுள்ளன





இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் தெரிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு