17,Sep 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி- நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்தார் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கொழும்பில் அவர் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் எனவும் தெரிவித்துள்ளார்


பிபிசி சிங்கள சேவைக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நீதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வெவ்வேறு வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டார்.

இதன் காரணமாக அவர் தானாக முன்வந்து சட்டமா அதிபரை ஆலோசனைக்காக சந்தித்தார்.



அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் என்றால் நீதிபதி என்றவகையில் அவசியமான பிடியாணைகளை பிறப்பிக்கும அதிகாரம் அவருக்கு உள்ளது.

அவரது இராஜினாமா குறித்து விசாரணைகளை மேற்கொண்டவேளை நீதிபதி ரீ சரவணராஜா ஒருகிழமைக்கு முன்னர் கொழும்பிற்கு வந்து தனது காரை விற்றார் இரண்டு வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்தார் என்பது தெரியவந்துள்ளது என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

 

 




தானாக முன்வந்து சட்டமாஅதிபரை சந்தித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி- நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு