28,Apr 2024 (Sun)
  
CH
அழகு குறிப்பு

முகத்தை அழகாக்கும் ரோஸ் வாட்டரை வீட்டிலேயே செய்வது எப்படி...?

ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. கடையில வாங்குறது விட வீட்டிலேயே எப்படி ரோஸ் வாட்டர் செய்வது என்பதை பார்க்கலாம்.

ரோஜா இதழ்களை நல்ல தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் போட்டு 20 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து, பின்னர் அதில் தேவைப்பட்டால் பாதாம் எண்ணெய் ஒரு டீஸ்பூன் அளவு விட்டு, பிறகு எடுத்து வடிகட்டி ஆறியதும், அந்த நீரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.


ரோஸ் வாட்டர் இது சருமத்துக்கு அதிக நன்மையை கொடுக்கிறது. ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம்.

 

ரோஸ் வாட்டரில் சிறிது கற்பூரத்தை போட்டு, அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.

வரட்சியான சருமம் உள்ளவர்கள் அந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தினால், நல்ல மிருதுவான சருமத்தை பெறலாம் கொடுக்கும். மேலும் முக்கியமா சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். சுருக்கமான சருமத்தை கொண்டவர்கள், இதனை தினமும் உபயோகப்படுத்தினால் சுருக்கங்கள் மறைந்து இளமையான சருமத்தை பெறலாம்.

 


முகம் சோர்ந்து காணப்பட்டால், அப்போது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைப்பதால், முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.






முகத்தை அழகாக்கும் ரோஸ் வாட்டரை வீட்டிலேயே செய்வது எப்படி...?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு