இப்போது ஆண்கள் பெண்கள் என எல்லோருக்கும் உள்ள பொதுவான பெரிய பிரச்சினை தலைமுடி உதிர்வு. இதை கட்டுப்படுத்துவதற்காக பலவலைகளை கையாண்டு தோற்று போனவர்களாகின் இதை செய்துபாருங்க பாரம்பரியமான முறையில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய வெந்தய எண்ணெய். இது இயல்பாகவே முடிவளர்சியை தூண்டுகின்றது.
வெந்தய எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள் :
வெந்தயம் – 2 மேசை கரண்டி
தேங்காய் எண்ணெய் – 1
கப் கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 7
செய்முறை விளக்கம் :
ஏழு சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் சூடேறியதும் ரெண்டு மேஜை கரண்டி அளவிற்கு வெந்தயத்தை போடுங்கள். வெந்தயத்தை அப்படியே போடுவதை விட, ஒரு நிமிடம் லேசாக வாணலியில் வறுத்து பவுடர் செய்து தேங்காய் எண்ணெயுடன் சேர்ப்பதும் நல்லது, சீக்கிரம் எண்ணெயில் ஊறும்.
- இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை கருவேப்பிலையை பிரஷ்சாக எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து ஃபேன் காற்றில் காய வைத்து எடுத்து பயன்படுத்துங்கள். வெந்தயத்தை போட்டதும் இந்த கருவேப்பிலை இலைகளையும் போடுங்கள். பின்னர் காய வைத்துள்ள வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். எண்ணெய் நிறம் மாறி வாசனை வரும் வரை சூடாக்கி, பின்பு நன்கு ஆறிய பின் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.
வாரத்திற்கு 2–3 முறை தலைமுடியில் ஸ்கேல்ப் பகுதியில் நன்கு மசாஜ் செய்து, 1–2 மணி நேரம் கழித்து சுத்தமான ஷாம்பூவால் கழுவவும். ஷாம்பூ பயன்படுத்துவதற்கு பதிலாக அதையும் வெந்தயத்தை வைத்தே தயார் செய்யலாம். ரெண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஒரு பவுலில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். தலையை அலசும் முந்தைய நாள் இரவு முழுவதும் ஊற வைத்த பின்பு, மறுநாள் நீங்கள் நீரில் ஊறிய அந்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி தலையை அலசினால், நல்ல நுரை வரும். மேலும் முடிக்கு இயற்கையான கண்டிஷனிங் செய்தது போல பளபளப்பும் கிடைக்கும்.
0 Comments
No Comments Here ..