இப்போது இருக்கின்ற காலப்பகுதியில் முகத்தின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதென்பது மிக கடினமாக உள்ளது. முகத்தின் அழகை பராமரிக்க அதிகநேரம் மற்றும் செலவுகள் அதிகமென்பதால் பெரும்பாலும் அவற்றில் ஈடுபடுவது குறைவாக உள்ளது.
ஆனால் உங்களின் அழகை குறைந்த செலவில் வீட்டில் இருந்தவாறே பராமரிக்கமுடியும். இதற்க்கு அதிக நேரமோ செலவோ இல்லை. மிக இலகுவாக உங்கள் இழந்த முகத்தின் பொலிவை திரும்ப கொண்டுவரலாம்.
நம்முடைய முகத்திற்கு அடியில் உள்ள தோல்களில் காணப்படும் சுரப்பிகளால் எண்ணெயானது சுரக்கப்டுகிறது. இது தான் முகத்தில் எண்ணெய் பசை வருவதற்கான காரணமாக உள்ளது. இவ்வாறு எண்ணெய் பசை வருவதன் விளைவாக சூரியன் ஒளியில் இருந்து படும் வெளிச்சம் மற்றும் தூசு ஆகியவற்றை தான் காலப்போக்கில் முகத்தில் மற்றும் உடம்பில் அழுக்குகளாக மாறுகிறது.
இந்த அழுக்கை முகத்தில் இருந்து நீக்குவதற்கு 2 வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.
முதலில் 1 ஸ்பூன் காபித்தூள் மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பவுலில் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக 2 நிமிடம் கலந்து கொள்ள வேண்டும். 2 நிமிடம் கழித்த பிறகு அதனுடன் 6 சொட்டு எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இவ்வாறு நீங்கள் வாரம் 3 முறை செய்வதன் மூலமாக காபி தூளில் உள்ள ஆன்டி ஆக்ஸைடு மற்றும் வைட்டமின்கள் முகத்தில் பருக்கள் மற்றும் எண்ணெய் பசை வராமல் செய்து முகத்தை பளிச்சென்று வைக்க உதவும்.
இரண்டாவதாக பேக்கினை தயார் செய்வதற்கு முதலில் 1 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 ஸ்பூன் தயிரினை ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதனை சிறிது நேரம் கலந்துக்கொள்ள வேண்டும்.
சிறிது நேரம் கழித்த பிறகு பவுலில் உள்ள பொருளுடன் 5 சொட்டு வேப்ப எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த பாஸ் பேக்கினை அப்ளை செய்து முகத்தை 10 நிமிடம் கழித்து கழுவி விட வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலமாக முகத்தில் பாக்டீரியா தொற்று எதுவும் வராமல் இருக்கச் செய்து பளிச்சென்று இருக்க செய்கிறது.
0 Comments
No Comments Here ..