10,May 2024 (Fri)
  
CH
WORLDNEWS

காஸா எல்லையில் லட்சக்கணக்கான மக்கள்!

இஸ்ரேல், பாலஸ்தீன மக்களை வெளியேற்றிய பரப்பு காஸாவின் ஒட்டுமொத்த பகுதியில் மூன்றில் இரண்டாக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதநேய விவகார பிரிவு தெரிவித்துள்ளது.பாதிப்படைந்த பகுதி 17.8 லட்சம் மக்களின் வாழ்விடமாக இருந்தது. இந்த எண்ணிக்கை காஸா மக்கள்தொகையில் 77 சதவிகிதம் ஆகும்.

அக்.7 ஹமாஸ் தாக்குதல் தொடங்கிய போர் நான்கு மாதங்களை நிறைவு செய்துள்ளது. இஸ்ரேல், காஸாவின் வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் தனது போர் நடவடிக்கைகளை விரிவாக்கியபோது அங்கிருக்கும் மக்களை வெளியேற அறிவுறுத்தியது.


தற்போது இஸ்ரேலிய படைகள் தெற்கு பகுதியிலும் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் நிலைகளைப் பின்தொடர்ந்து செல்வதாகவும் ஹமாஸ்தான் மக்களைத் தங்கள் கேடயமாக உபயோக்கிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா சுகாதார அமைச்சகம் இதுவரை பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 27 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.


கான் யூனிஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ராபா நோக்கி இடம்பெயந்துவருகின்றனர். பிராந்தியத்தின் பெரும்பான்மை மக்கள் தொகை மிகச் சிறிய இடம் நோக்கி நகர்ந்து வருவது மனிதர்கள் வாழும் சூழலை அபாயகரமானதாக மாற்றும் என்கிற அச்சம் உருவாகியுள்ளது.


இதனை ஐ,நா.வின் மனிதநேய விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.




காஸா எல்லையில் லட்சக்கணக்கான மக்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு