சீனாவின் வூஹானிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான எவ்வித அறிகுறிகளும் இல்லையனெ கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் வைத்தியர் சேமகே தெரிவித்துள்ளார்,
வூஹானில் இருந்து அழைத்துவரப்பட்ட 33 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனைகளிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது,
அத்துடன் வூஹானில் இருந்து நாட்டிற்கு வந்த மாணவர்கள் இராணுவப் பாதுகாப்புடன் மத்தளை விமான நிலையத்திலிருந்து பாதுகாப்பாக தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தியத்தலாவையில் குறித்த 33 மாணவர்களுக்கும் தனியான அறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு அங்கு தனியான கழிப்பறைகள், ஆடைகள், உணவுகள் மற்றும் இணைய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன,
குறித்த மாணவர்கள் எதிர்வரும் 02 வாரங்களுக்கு அங்கு தங்க வைக்கப்படவுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது,













0 Comments
No Comments Here ..