புதிதாக பதிவு செய்வதற்காக 13 கட்சிகள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அன்று முதல் இன்றுவரை இந்த எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது,
விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றதன் அதில் செல்லுபடியான விண்ணப்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களை நேர்முகத் தேர்வுக்கு உட்படுத்தி புதிய பதிவு செய்யப்பட்ட கட்சிகளை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
அத்துடன் இந்த மாதம் 17 ஆம் திகதியுடன் புதிய கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் திகதி நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது,
0 Comments
No Comments Here ..