வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் கால எல்லையை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், முறையான வங்கி முறைகள் மூலம் இலங்கையில் உள்ள உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வெளிநாட்டுப் பணம் அனுப்பும் இலங்கையர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த திட்டம் செல்லுபடியாகும் காலத்தை 2024 ஜூன் 30 வரை நீடிக்க கடந்த ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகளை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கும் வகையில் ஜனாதிபதி இந்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார்.
0 Comments
No Comments Here ..