06,Apr 2025 (Sun)
  
CH
இலங்கை செய்தி

வடக்கில் சோதனை நடவடிக்கையால் அல்லலுறும் பயணிகள்

வடக்கில் ஏ9 வீதியை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் சோதனை நடவடிக்கைகளால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை போன்ற பகுதிகளில் இராணுவச் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பேருந்துகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

பயணிகள் பேருந்துகளே முழுமையாக சோதனையிடப்பட்டு வருவதுடன், கடந்த ஒரு வாரகாலமாக போர் காலத்துடன் ஒப்பிடும் வகையில் பேருந்துகளில் செல்லும் பயணிகள் முழுமையாக இறக்கிவிடப்பட்டு அவர்களது பயணப்பொதிகள் சோதனையிடப்படுகின்றது.

இதனால் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பொதுமக்கள் தமது பயணத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

வன்னி பகுதியில் மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிக்கு அடுத்த படியாக புதூர் சந்தியில் 15 கிலோமீற்றர் இடைவெளியில் மற்றொரு சோதனை சாவடியும், அதற்கு அடுத்ததாக 15 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் ஓமந்தையிலும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சோதனை கடமையில் இருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அதிகமான பேருந்துகள் வருகை தரும் போது கால தாமதம் ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றமை குறிப்பிடதக்கது.




வடக்கில் சோதனை நடவடிக்கையால் அல்லலுறும் பயணிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு