இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அரசியலமைப்பின் 34வது பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவும், நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பரிந்துரையின்பேரிலும் இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை மோசடி, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் திருட்டு சம்பவங்கள் முதலான சிறிய குற்றங்களின் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களாகும்.
பாலியல் துஷ்பிரயோகம், கொள்ளை மற்றும் கையூட்டல் கோருதல் போன்ற பாரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்த பட்டியலில் இல்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி சிறையில் இருந்த கைதிகளுக்கு மட்டுமே இந்த பொது மன்னிப்பு ஏற்புடையதாகும்.
இதற்மைய, நாளைய தினம் அவர்கள் விடுவிக்கப்படுவர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..