சர்வதேச கிரிக்கட் பேரவையின் சமீபத்திய ஒருநாள் தரவரிசையின் படி, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அதன்படி, ஒருநாள் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பெத்தும் நிஸ்ஸங்க 08வது இடத்தை பிடித்துள்ளார்.
முன்னதாக 11-வது இடத்தில் இருந்த பெத்தும், 3 இடங்கள் முன்னேறி இவ்வாறு 8வது இடத்தை பிடித்துள்ளார். பெத்தும் நிஸ்ஸங்க மொத்தமாக 711 புள்ளிகளை பெற்றுள்ளார்.பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..