பண்டிகைக் காலத்தில் 'sale'என்ற பெயரில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் இடங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலாவதியாகவிருக்கும் பொருட்களின் தகவல்கள் மாற்றப்பட்டு, பண்டிகைக் காலங்களில் விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அதன் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.
எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..