பேருவளை ஆரியவன்ச கல்லூரியின் ஸ்மார்ட் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர். அடுத்த வருடம் க.பொ.த பொதுப் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய மாணவர்கள் இருவர் மற்றும் பாணந்துறை, பாதுக்க பிரதேசங்களில் வசிக்கும் மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் பௌர்ணமி தினத்தன்று பாடசாலையின் வகுப்பறைக்குள் மடிக்கணினி உடைக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் மடிக்கணினிகளை விற்பனை செய்யவுள்ளதாக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அவர்களிடம் நடத்திய விசாரணையில், பாணந்துறை, பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை தொடர்பு கொண்டு மடிக்கணினிகளை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 12 திருடப்பட்ட மடிக்கணினிகள் பாதுக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..