இலங்கையின் வடபகுதியில் சேவையாற்றுவதற்காக 2000 தமிழ் பொலிஸார் நியமிக்கப்படவுள்ளனர்.
இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றிருந்தது.இதன்போது பொலிஸாரின் அணிவகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தமிழில் மாத்திரம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது அதில், வடபகுதியில் சேவையாற்றுவதற்காக தமிழ் பொலிஸார் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை. சிங்களத்தில் மட்டுமே பாடப்பட்டது.கடந்த மைத்திரி – ரணில் ஆட்சியில் தமிழில் தேசிய கீதம் சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..