கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரிலிருந்து அழைத்துவரப்பட்ட 33 இலங்கை மாணவர்களில் இருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். 6 பேர் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்களையடுத்து சீனாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த இலங்கை மாணவர்களை, இலங்கை அரசு விசேட விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளது. அவர்கள் தியத்தலாவையிலுள்ள இராணுவ பயிற்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.14 நாட்கள் கண்காணிப்புக்குப் பின்னரே அவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
வட்டுக்கோட்டை மற்றும் பருத்தித்துறையைச் சேர்ந்த இரு மாணவிகளும் அழைத்து வரப்பட்ட 33 மாணவர்களில் உள்ளடங்குகின்றனர். இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் புத்தளத்தைச் சேர்ந்தவர்கள்.கடந்த ஒரு வாரமாக சீனாவில் பெரும் அச்சத்துடன் தனித்தே வாழ்ந்தோம். அந்தப் பகுதியில் வெளியில் செல்வதற்கே ஓர் மரண பீதி நிலவியது. நாட்டுக்கு வந்ததே போதும் என்ற மனநிலையில் உள்ளோம்’ என்று தியத்தலாவையிலுள்ள மாணவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..