கோலிவுட்டில் இப்ப இருக்கிற நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை த்ரிஷா மட்டும் தான். அந்த வகையில் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திற்கு 12 கோடி சம்பளத்தை பெற்றிருக்கிறார்.
இதே மாதிரி தன்னுடைய சம்பளமும் அதிகரிக்க வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு தந்திரமாக காய் நகர்த்தி வருகிறார் நயன்தாரா. அதாவது ஆசைப்படுவது தப்பில்லை, ஆனால் அதற்கு நாம் தகுதியானவர் தானா என்று யோசித்து அதன் மேல் ஆசை படனும் என்று சொல்வார்கள்.
இந்த நிலையில்தான் நயன்தாராவும் இருக்கிறார். அதாவது சமீபத்தில் நயன்தாரா நடித்த படங்கள் எதுவுமே இங்கே எடுபடவில்லை. நல்லா ஓடியே பல வருஷம் ஆகுது. ஆனால் சம்பளம் மட்டும் கொஞ்சம் கூட குறையாமல் படத்துக்கு படம் எகிறது. அது எப்படி என்ன காரணம் என்றால் நயன் தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்தும் புது இயக்குனர்களின் கதையை தான். அத்துடன் ஏதாவது ஷார்ட் பிலிம் எடுத்த இயக்குனர்களை புக் பண்ணி நடித்து வருகிறார். அப்படி நயன் நடித்தால் அந்த இயக்குனர்களுக்கு கம்மியான சம்பளத்தை கொடுத்து விடலாம்.
அதாவது இயக்குனர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்களோ, அதை நயன்தாரா தயாரிப்பாளரிடம் கரராக பேசி வாங்கி விடுகிறார். அதன்பின் இவர் நடிக்கப் போகும் புது இயக்குனர்களுக்கு இவ்வளவுதான் சம்பளம் என்று ஒரு 50 லட்சம் ரூபாயை மட்டும் அவர்களுக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை நயன்தாரா அவருடைய சம்பளமாக வைத்துக் கொள்கிறார்.
இப்படித்தான் நயன்தாராவின் பொழப்பு போய்க் கொண்டிருக்கிறது. படமே ஓடவில்லை என்றாலும் பணம் எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று யுத்தியை சரியாக தெரிந்து வைத்திருக்கிறார். அந்த வகையில் அடுத்து கமிட் ஆகப் போகும் படத்திற்கு 11 கோடி வரை சம்பளத்தை வாங்குகிறார். நயன்தாராவை பொறுத்தவரை எந்த நடிகை அதிகமாக சம்பளம் வாங்குகிறார்களோ, அவர்களுக்கு தான் மார்க்கெட்டில் அதிக மவுஸ் உண்டு. அதனால் எப்படியாவது த்ரிஷாவை விட அதிகமான சம்பளத்தை வாங்க வேண்டும் என்று பல வழிகளில் முயற்சி எடுத்து வருகிறார்.
0 Comments
No Comments Here ..