03,May 2024 (Fri)
  
CH
SRILANKANEWS

அவதானமாக செயற்படவும் - பொலிஸாரின் எச்சரிக்கை!

பண்டிகை காலங்களில் போலி நாணயத்தாள் மோசடியாளர்கள் மற்றும் மோசடி வியாபாரிகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக மக்கள் பல்வேறு பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்வதாக தெரிவித்த பொலிஸார், இதன்போது பல்வேறு மோசடியாளர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மக்கள் சுற்றுலா செல்ல வேண்டிய விதம் குறித்தும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கமளித்தார்.

“சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, பலர் தங்கள் உறவினர்களைப் பார்க்கச் செல்கிறார்கள், அவர்கள் கிராமங்களுக்குச் செல்கிறார்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க. அவ்வாறு இந்த விடுமுறைக் காலத்தில் பயணம் செல்லும் போது சில விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். பயணம் செய்யும் வாகனங்கள் தனியார் வாகனங்களாகவோ அல்லது பொது வாகனங்களாகவோ இருக்கலாம். தனிப்பட்ட வாகனமாக இருந்தால் உங்கள் வாகனத்தை செலுத்துபவர் மது அருந்தினாரா?, அதிவேகமாக பயணிக்கிறாரா?, மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுகிறாரா? என்பதை அவதானியுங்கள். அவ்வாறு செயற்படின் அதற்கு எதிராக குரல் கொடுக்க முடியும். பொது போக்குவரத்தின் போதும் இவற்றை அவதானியுங்கள். நெடுஞ்சாலையில் இதுபோன்று நடந்தால் 1969 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவியுங்கள். பொலிஸார் இதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்" என்றார்.





அவதானமாக செயற்படவும் - பொலிஸாரின் எச்சரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு