கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 16 பேர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகளில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 3 பேர் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதுடன் கராப்பிட்டிய மருத்துவமனையில் இரண்டு பேரும் கண்டி போதனா வைத்தியசாலையில் நான்கு பேரும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..