தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான 2 ஆவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியுஸிலாந்து மகளிர் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிப்பெற்றுள்ளது.
இந்த போட்டி நியுஸிலாந்தின் Hamilton மைதானத்தில் இன்று காலை இடம்பெற்றது.
இதன்போது, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகலவிக்கெட்டுக்களைம் இழந்து 119 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்படி, 120 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி, 18.2 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இதேவேளை, ஐந்து போட்டிகளை கொண்ட இந்த தொடரில், நியுஸிலாந்து அணி 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
0 Comments
No Comments Here ..