20,Jun 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வட மாகாண சார்ள்ஸ் ஆளுநர் பணிப்பு

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

அண்மைக்காலமாக பகிடிவதை தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் 

எனினும் இன்றுவரை  பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதை தொடர்பில் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு சவால்களை எதிரவகொள்வதாகவும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். 

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவி ஒருவர் தொலைபேசி மூலம் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டதாக மாணவியின் பெற்றோர் வடக்கு மாகாண ஆளுனரின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 

இந்த பணிப்புரைக்கு அமைய வடக்கு மாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட கவனத்தின் கீழ் பல்கலைக்கழக அதிகாரிகள் பகிடிவதைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




பகிடிவதைக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வட மாகாண சார்ள்ஸ் ஆளுநர் பணிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு