15,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள பிரதமர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இதனடிப்படையில் இன்று மாலை 5.35 அளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதுடெல்லிக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அவரின் இந்திய விஜயம் அமையவுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தங்கவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் இந்திய வெளிவிகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை அவர் சந்திக்கவுள்ளார்.

அத்துடன் புத்தகாயா, திருப்பதி உள்ளிட்ட மத வணக்கஸ்த்தளங்களுக்கும் பிரதமர் பயணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள பிரதமர்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு