09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 900 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதிதாக 91 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன் குறித்த மாகாணத்தில் இரண்டாயிரத்து 618 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டடுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனடிப்படையில் 39 ஆயிரத்து 800 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

எவ்வாறாயினும் இதுவரையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோரின் உடல்களில் இருந்து சிகிச்சைகளின் பின்னர் கொரோனா வைரஸ் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவர்கள் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகக் கூடுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவுகின்ற நாடுகளில் தற்போது இந்தியாவும் பெயரிடப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் உள்ள பல்பலைகழகம் ஒன்று நடாத்திய ஆய்வின் அடிப்படையில் முதல் 20 நாடுகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா 17 வது நாடாக பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் சீனாவில் இருந்த இந்திய பிரஜைகளை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்புவதற்கு உதவியமைக்காக சீன அரசாங்கத்திற்கு தமது நன்றிகளையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.




கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு