நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று புத்தகாய மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வழிபாடுகளில் ஈடுப்படவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்புக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 7 ஆம் திகதி இந்தியாவுக்கான விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரச தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டிருந்ததாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் வாரணாசி,சாரநாத் உள்ளிட்ட இடங்களுக்கு பயணித்திருந்தார்.
இந்தநிலையில் இந்தியா விஜயத்தை முடித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..