சமூகப் பிரச்சினைகள் குறித்த தனது கூர்மையான வரிகளால் அண்மைகாலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் மலையாள ராப் பாடகர் 'வேடன்', விரைவில் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.
திருச்சூரில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் தாய்க்கும், கேரளாவைச் சேர்ந்த முரளிக்கும் பிறந்த ஹிரந்தாஸ் முரளிதான் 'வேடன்' என்ற பெயரில் பிரபலமாகியுள்ளார்.
2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் யூடியூபில் வெளியான தனது முதல் ஆல்பம் பாடலான 'வாய்ஸ் ஆஃப் தி வாய்ஸ்லெஸ்' மூலம் இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தப் பாடலில் சாதி, மத அடக்குமுறைகளுக்கு எதிராக இவர் குரல் கொடுத்தது பரவலாகப் பேசப்பட்டது.
திரைத்துறைப் பங்களிப்புகள்
தொடர்ந்து பல மலையாளப் படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார் வேடன். சமீபத்தில் டோவினோ தாமஸ் மற்றும் சேரன் நடிப்பில் வெளியான 'நரிவேட்டை' திரைப்படத்தில் பழங்குடியினரின் போராட்டம் குறித்த 'வாடா வேடா' என்ற பாடலை எழுதிப் பாடினார்.
திரைப்படப் பாடல்களைத் தவிர, சுயாதீன இசை ஆல்பங்களிலும் கவனம் செலுத்தி வரும் வேடன், தற்போது இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். இந்தத் திரைப்படத்தில் பரத், ஆரி அர்ஜுனன், அம்மு அபிராமி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Comments
No Comments Here ..