எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச "அபே ஜாதிக்க பெரமுன" (எங்கள் தேசிய முன்னணி ) கட்சியின் ஊடாக பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் சஜித் தமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு பதில் புதிய முன்னணியில் போட்டியிட பெரும்பாலான உறுப்பினர்கள் இணக்கம் வெளியிடவில்லை.
இதனை அடுத்து சஜித் பிரேமதாச பொதுசெயற்குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இந்த நிலையில் தாம் "அபே ஜாதிக பெரமுன" கட்சியின் ஊடாக போட்டியிட உள்ளதாக அவர் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரை நேற்று சந்தித்து அறிவித்துள்ளார்.
அந்த கட்சியின் நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளதாகவும் சின்னமாக "இதயம்" தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சஜித் அறிவித்தார்.
எனினும் இதயம் என்ற சின்னம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சின்னங்களில் இல்லை என்பதால் அதில் பிரச்சினையை உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..