06,Feb 2026 (Fri)
  
CH
விளையாட்டு

முரளிதரனின் 800 டெஸ்ட் விக்கெட் சாதனைக்கு 15 ஆண்டுகள் நிறைவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய ஒரே பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை முரளிதரன் படைத்துள்ளார்.


1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முரளிதரன், இலங்கை அணிக்காக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது சிறப்பான சுழற்பந்து வீச்சால் 67 முறை 5 விக்கெட்டுகளையும், 22 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.


இந்திய அணிக்கு எதிராக 105 விக்கெட்டுகளையும், இங்கிலாந்து அணிக்கு எதிராக 112 விக்கெட்டுகளையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 59 விக்கெட்டுகளையும் வீழ்த்தி எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அவரது இந்த அசாத்தியமான சாதனை, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நீங்காப் புகழ்பெற்று விளங்குகிறது.




முரளிதரனின் 800 டெஸ்ட் விக்கெட் சாதனைக்கு 15 ஆண்டுகள் நிறைவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு