27,Nov 2024 (Wed)
  
CH
இலங்கை செய்தி

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை

முல்லைத்தீவு – மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள புனரவாழ்வு பிரிவிற்கான கட்டடம் அமைக்கப்படவுள்ள பகுதியில் நேற்று முன்தினம் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த பகுதியில் நேற்று அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரி தடயவியல் பொலிஸாரின் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அகழ்வுப்பணிகளின் போது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை சட்ட அதிகாரியினால் பரிசோதனைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.





மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் 20 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு