யாழ்ப்பாணத்திலிருந்து மாதகல் கடற்கரை மார்க்கமாக கடத்த இருந்த 14 கிலோ 300 கிராம் கொண்ட தங்கத்தை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது இரு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு யாழ் மாவட்ட உதவி சுங்கத்திணைக்களத்திடம் கையளித்துள்ளனர்.
14 கிலோ 300 கிராம் தங்கக்கட்டிகளையும் படகு ஒன்றினையும் பறிமுதல் செய்துள்ளதுடன் குறித்த தங்கக் கட்டிகளை அதிகாரிகளிடம் கடற்படையினர் கையளித்துள்ளனர்.
இதன் பெறுமதி சுமார் 13 கோடியே 70 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையினை சுங்கத்திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..