ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு, கட்சியின் தலைமையமான சிறிகொத்தவில் நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக அவர் கூறியுள்ளார்
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள கூட்டணியின் சின்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலநதுரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியின் சின்னத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இதன்போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் சின்னம் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருமித்த தீர்மானமொன்றை மேற்கொள்வதற்கு அனைவரும் இணங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
புதிய கூட்டணிக்கான சின்னம் பெரும்பாலும் அன்னம் அல்லது யானையாகவே அமையும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அகில விராஜ் காரியவசம் சுட்டிக்காட்டினார்.
0 Comments
No Comments Here ..