23,Nov 2024 (Sat)
  
CH
இலங்கை செய்தி

நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்

நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரம் போலி வைத்தியர்களினால் சிகிச்சையளிக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, அவர்களில் சுமார் 10 ஆயிரம் போலி வைத்தியர்கள் இதுவரை அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், இவ்வாறான போலி மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்தி, புதிய சட்டங்களை வகுக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.




நாடு முழுவதும் 40 ஆயிரம் போலி வைத்தியர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு