தடைகளை நீக்கி உள்நாட்டு மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், தொழில்களை ஆரம்பிப்பதற்கும், நடத்திச் செல்வதற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்ற சிக்கல்களை அடையாளங்காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில் மற்றும் நிறுவன மேம்பாட்டுக்கான அமைச்சகங்களுக்கு இடையிலான படையணியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
உலோகம், காலணி, ஆடை, மருந்துகள், மின் உபகரணங்கள், அழகுசாதனப் பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
இதற்கமைய, உற்பத்தியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள், வரி செலுத்தும் போது மற்றும் சுங்க நடவடிக்கைகளின் போது எதிர்நோக்குகின்ற சிக்கல்கள் குறித்து இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..