05,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பிணைமுறி மோசடி விவகாரம் - இன்றும் தொடர்கின்றது நாடாளுமன்ற விவாதம்

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து நேற்றைய தினம் நாடாளுமன்றில் ஆரம்பித்த விவாதம் இன்றும் தொடரவுள்ளது. 

நேற்றைய தினம் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மத்தியவங்கி பிணை முறி மோசடியின் பிரதான குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த மத்திய வங்கி பிணை முறி மோசடியின் முதற் குற்றவாளி முன்னாள் பிரதமர்ரணில் விக்கிரமசிங்க என, இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பகிரங்கமாக குற்றம் சுமத்தினார்.

ரணில் விக்கிரமசிங்கவே முதன்மைக் குற்றவாளி என்ற போதும், அவருக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என, மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார். 

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான வழக்கு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன்பலி ஹேன ஆகியவர்கள் மீதே தொடுக்கப்பட்டுள்ளதாக, மஹிந்தானந்த அளுத்கமகே தமது நேற்றையஉரையில் குறிப்பிட்டார். 

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிஹேன ஆகியவர்கள் மீது மட்டுமே, வழக்குத் தொடர்ந்து பலன் இல்லை எனத் தெரிவித்த அவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள்மற்றும் கோப் குழு உறுப்பினர்கள் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.  

இதேவேளை, நாடாளுமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை இல்லாமலாக்கி தமக்கு பலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே, ராஜபக்‌ஷ தரப்பினர் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக்கோருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்

நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத்தெரிவித்தார்.




பிணைமுறி மோசடி விவகாரம் - இன்றும் தொடர்கின்றது நாடாளுமன்ற விவாதம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு