வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காகஅமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் - மயிலிட்டி பகுதியில் இடம்பெறவுள்ள இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில்,சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கலந்துகொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானஅங்கஜன் இராமநாதன் இந்த நிகழ்வில் விசேட விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தின்கீழ், புதிய தொழில்நுட்பத்தில் 28ஆயிரம் கொங்கிரீட் நிரந்தர வீடுகள் மற்றும் பயனாளிகளால்அமைக்கப்படும் நிரந்தர வீடுகள் ஆகியன உருவாக்கப்படவுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.
புதிய தொழில்நுட்பத்திலான வீட்டுத் திட்டத்தில் கொன்கிறீட் தகடுகளைக் கொண்டுநவீன முறையில் 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபா செலவில் ஒவ்வொரு வீடும் அமைக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு பயனாளிக்கும் 10 லட்சம் ரூபா நிதி வழங்கப்படவுள்ளது.
0 Comments
No Comments Here ..