வெளியுறவுச் செயலாளர் ஆரியசிங்ஹ ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிடப்பட்டுள்ளது.
43 ஆவது மனித உரிமைப் பேரவையின் அமர்வு நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கு முன்னதாக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் தலைவரை சந்தித்த இலங்கை வெளியுறவுச் செயலாளர் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1 தீர்மானத்தில் இருந்து விலகிக்கொள்ளும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து விளக்கமளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் இலக்கம் 30/1 மற்றும் 2017 ஆம் ஆண்டு மார்ச் இலக்கம் 34/1 ஆகிய முந்தைய தீர்மானங்களுடன் இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை மேம்பாடு ஆகியவற்றை இணைத்து 2019 ஆம் ஆண்டு மார்ச் இலக்கம் 40/1 இன் இணை அனுசரணை தீர்மானம் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட குறித்த பிரேரனையில் தொடர்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த புதன் கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் இருந்து விலகிக்கொள்ளும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..