கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு செலுத்தப்ப் வேண்டிய ஒரு பில்லியன் ரூபா நிதியை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு திறைசேரியிடம் கோரியுள்ளது,
ஜனாதிபதித் தேர்தலுக்கான செலவீனங்களில் 1 பில்லியன் ரூபா இதுவரை செலுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
அவ்வாறு அந்த நிதி வழங்கப்படுகின்ற பட்சத்திலேயே தமக்கு பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
அத்துடன் எதிர்வரும் வாரம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் திறைசேரியின் அதிகாரிகளுக்கிடையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது,
பொதுத் தேர்தலுக்கான செலவு 5 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவிலிருந்து 6 ஆயிரம் மில்லியன் ரூபாவரை அதிகரிக்கலாம் எனவும் வேட்பாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் 7 ஆயிரம' மில்லியன் ரூபா வரை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தல் ஊழியர்கள் 20 ஆயிரம் பேர் மேலதிகமாக தேவைப்படலாம் எனவும் அதன் மூலம் 3 இலட்சம் பேர் இம்முறை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது,
0 Comments
No Comments Here ..