எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான சமகி ஜனபல வேகய எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு சமகி ஜனபல வேகய முன்வைத்த கோரிக்கைக்கு தாம் இன்னும் எந்தவித முடிவுகளை அறிவிக்கவில்லை என புதிய ஜனநாயக முன்னணி குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை தமது கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் எடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அன்னம் சின்னம் கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் வேறு ஒரு புதிய சின்னத்தில் களம் இறங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..