மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு விக்கெட்டினால் இலங்கை அணி வெற்றிப்பெற்றுள்ளது.
கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் மிகவும் அபாரமாக துடுப்பெடுத்தாடிய Shai Hope 115 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணிக்காக இசுரு உதான 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த நிலையில், 290 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நம்பிக்கை அளித்தனர்.
அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், அவிஸ்க்க பெர்ணான்டோ 50 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.
ஒருக்கட்டத்தில் பின்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க Wanindu Hasaranga மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன்படி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், 1.0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.
0 Comments
No Comments Here ..