21,Nov 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்!

அவுஸ்ரேலியாவில் பாடசாலை ஒன்றில் மாணவர்களால் கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனை ஆல்-ஸ்டார் ரக்பி அணியினர் மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வளர்ச்சியின்மை காரணமாக குறித்த சிறுவன் பாடசாலையில் எதிர்கொண்ட துன்பங்களை தனது தாயிடம் தெரிவித்து, தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் எனவும் தெரிவித்து அண்மையில் மனதை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது

இதனை அடுத்து உலக நாடுகளில் அச் சிறுவனுக்கு ஆதரவாக குரல் எழுப்பட்டு வருகிறது குறிப்பாக சிறுவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் பிரபலங்கள் உள்பட விளையாட்டு வீரர்களும் தமது அனுதாபத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவின் ஆல்-ஸ்டார் ரக்பி அணியில் துன்பத்துக்குள்ளான சிறுவனை வரவேற்கும் முகமாக அவரை மைதானத்திற்கு அழைத்து வந்து அணியை வழிநடத்தும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

குயின்ஸ்லாந்தின் ராபினாவில் உள்ள சிபஸ் சூப்பர் ரக்பி மைதானத்திற்கு நடுவில் குவாடன் பெல்ஸ் உற்சாகமாக அணியின் வீரரான தோம்சனுடன் கைகோர்த்து மைதானத்தற்குள் உள்நுழைந்தார்.

இதனை பார்த்த பார்வையாளர்கள் அவரை பெரும் சந்தோஷத்துடன் வரவேற்றமை அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், குவாடன் பெல்ஸ் தனது முகத்தில் பிரகாசமான புன்னகையை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.





கேலி கிண்டலுக்குள்ளான சிறுவனுக்கு மைதானத்திற்குள் கம்பீர வரவேற்பு – நெகிழ்ச்சியான சம்பவம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு